newsGNU Tamilization - News: குனு அறம் - முதற் பகுதி - நிறைவினை நோக்கி..

 
 

குனு அறம் - முதற் பகுதி - நிறைவினை நோக்கி..

Item posted by ஆமாச்சு <amachutechie> on Sun 14 Oct 2007 04:17:39 AM UTC.


கடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் கொண்டிருக்கின்றது. குனுவின் கொள்கைகளை தமிழாக்கம் செய்யத் துணிந்து எமது சிந்தையில் அவசியமாகக் கருதப் பட்ட கட்டுரைகளை முதற்கண் தமிழாக்கம் செய்யலாம் என எண்ணினோம்.

குனு(2) - கட்டற்ற மென்பொருள் (3) - அதன் கொள்கைகள் (4) - அதன் அவசியம் (5) - குழப்பங்கள் (6) - மென் துறை எதிர்நோக்கும் சவால்கள் (7) - மற்றவை (8) இப்படி இக்கட்டுரைகள் அமைந்திருப்பது நல்லது எனத் தோன்றியதன் விளைவாக, அவற்றை உள்ளடக்கியத் தொகுப்பாக இது இருப்பது நல்லது என நினைத்துத் துவக்கப் பட்ட பணி.

இவையனைத்தையும் தொகுத்து http://amachu.net/download/gnu_aram/gnu_aram_v5.odt கோப்பினுள் கொடுத்துள்ளோம். எழுத்துப் பிழைகள், கலைச் சொல் சரிபார்த்தல் முதலிய பணிகள் மீதமுள்ளன. இவற்றை இம்மாத இறுதிக்குள் செய்து விட உத்தேசம்.

இதனை நல்லதொரு மின்-புத்தகமாக ஆக்க உதவி தேவை. docbook xml மற்றும் Latex இவற்றுள் எதைப் பயன்படுத்திச் செய்யலாம்? இவை இரண்டின் பெயர் மட்டுமே தெரியும். இவற்றை அறிந்த ஒருவரின் உதவியினை நாடுகிறோம்.

குனு/ லினக்ஸ் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சமயங்களில் இக்கோப்பும், இணைப்புகளும் தங்களுக்குத் துணை புரியும் என நம்புகிறோம். அவசியமாயின் அச்சேற்றுவது குறித்தும் ஆராயலாம்.

(1) https://savannah.gnu.org/projects/wwwta/
(2) http://www.gnu.org/home.ta.shtml
(3) http://www.gnu.org/philosophy/free-sw.ta.html
(4) http://www.gnu.org/philosophy/shouldbefree.ta.html & http://www.gnu.org/philosophy/why-free.ta.html
(5) http://www.gnu.org/philosophy/free-doc.ta.html & http://www.gnu.org/philosophy/schools.ta.html
(6) http://www.gnu.org/philosophy/not-ipr.ta.html , http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html & http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html
(7) http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html & http://www.gnu.org/philosophy/can-you-trust.ta.html
(8) http://www.gnu.org/philosophy/categories.ta.html

பி.கு:

   1. தங்களுக்குத் தமிழ் மாத்திரமே தெரியும் எனக் கருதிக் கொண்டு இக்கோப்பினை/ இணைப்புகளை வாசிக்கத் துவங்குங்கள். அடைப்புக் குறியில் ஆங்கிலச் சொற்கள் குறிப்பிடப் பட்டிருக்காது.
   2. தங்களுக்குப் புரியாத தமிழ் சொற்களை வாசிக்க நேரிட்டால், ஆங்கிலம் முதலிய மொழிகளின் கட்டுரைகளை வாசிக்கும் பொழுது எவ்வாறு அகராதியொன்றின் துணையினை நாடுவீர்களோ அதே போல் தமிழ் அகராதி ஒன்றின் உதவியினை நாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உ.ம்: http://ta.wiktionary.org, http://spreadsheets.google.com/pub?key=pp4av-Ip1XDciqbBDFTR0aA


 

Back to the top

Powered by Savane 3.13-3230.
Corresponding source code